மாட்டுத்தாவணி பஸ் நிலைய கடைகளுக்கு வாடகை வசூலிக்க கூடாது என வழக்கு
மாட்டுத்தாவணி பஸ் நிலைய கடைகளுக்கு வாடகை வசூலிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரை
மாட்டுத்தாவணி பஸ் நிலைய கடைகளுக்கு வாடகை வசூலிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வாடகை வசூல்
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய கட்டிட கடை வாடகைதாரர்கள் சங்க செயலாளர் அப்துல் காதர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் 88 கட்டிட கடை வாடகைதாரர்கள் உள்ளோம். கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகளை அடைத்து விட்டு சென்று விட்டோம். இதில் கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்து விட்டன. இந்த நிலையில் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை மாதம் வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த நிலையிலும், வாடகையை கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டோம். எனவே 5 மாதத்திற்கான வாடகை வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மாநகராட்சி அதிகாரிகள்
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மதுரை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story