மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீ


மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீ
x
தினத்தந்தி 13 Feb 2021 2:37 AM IST (Updated: 13 Feb 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீ

திருச்சி,
திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது மாடுகளுக்கு தேவையான வைக்கோல்கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். சோமரசம்பேட்டை பஸ்நிலையம் அருகே  சென்றபோது, அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள, மளவென டிராக்டர் முழுவதும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story