சிறுகனூர் அருகே லாரி மோதியதில் கல்லூரி பஸ் கவிழ்ந்தது; 8 பேர் படுகாயம்


சிறுகனூர் அருகே லாரி மோதியதில் கல்லூரி பஸ் கவிழ்ந்தது; 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 Feb 2021 2:37 AM IST (Updated: 13 Feb 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே லாரி மோதியதில் கல்லூரி பஸ் கவிழ்ந்தது; 8 பேர் படுகாயம்

சமயபுரம், 
சமயபுரத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி தனியார் கல்லூரி பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி, கல்லூரி பஸ் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய கல்லூரி பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவ-மாணவிகள், கல்லூரி பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story