சிமெண்டு, கம்பிகளின் விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சிமெண்டு, கம்பிகளின் விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2021 9:07 PM GMT (Updated: 12 Feb 2021 9:07 PM GMT)

சிமெண்டு, கம்பிகளின் விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, 
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மையத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய முன்னாள் துணைத்தலைவர் திரிசங்கு, துணைத்தலைவர்கள் ஜோதி மகாலிங்கம், நெப்போலியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராம் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சிமெண்டு மற்றும் இரும்பு கம்பி விலை உயர்வை அதன் உற்பத்தி நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும். அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கட்டுமான பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story