திருச்சியில் பரபரப்பு; ரெயில்முன் பாய்ந்து தம்பதி தற்கொலை? உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சியில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் தம்பதிகளா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளிடம் டோல்கேட்,
ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
திருச்சி-சென்னை ரெயில் வழித்தடத்தில் ஸ்ரீரங்கத்தை அடுத்த பிச்சாண்டார் கோவில் அருகே ரெயில்வே தண்டவாள பகுதியில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது சற்று தூரத்தில் ரெயில் தண்டவாளப்பகுதி அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பிணமாக கிடந்தார். இருவரின் உடல்களையும் கைப்பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
தம்பதியா?
ஆனால், அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இருவரும் கணவன், மனைவியாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சினையால் விரக்தி அடைந்து இருவரும் அவ்வழியாக வந்த ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.
இருவரது உடல்களும் அடையாளம் காணும் வகையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story