இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தை கடைசி வெள்ளிக்கிழமையைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தை கடைசி வெள்ளிக்கிழமையைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருேக இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் , விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம்
எண்ணற்ற பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக தை கடைசி வெள்ளிக்கிழமை திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
சிறப்பு பஸ்
இருக்கன்குடிக்கு திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றிேய பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சுகாதார மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் கோவிலின் சுற்றுப்புறங்களில் சுகாதாரப்பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தி உள்ளனர்.
ஏற்பாடு
பாதுகாப்பு பணியில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.
Related Tags :
Next Story