க.பரமத்தில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்


க.பரமத்தில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்
x
தினத்தந்தி 13 Feb 2021 2:49 AM IST (Updated: 13 Feb 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது.

க.பரமத்தி
க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட காருடையாம்பாளையம், புஞ்சைகாளிகுறிச்சியில் அம்மா மினி கிளினிக்கை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். காருடையாம்பாளையம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். புஞ்சைகாளிகுறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். இதனையடுத்து ரூ.88.68 லட்சத்தில் காருடையாம்பாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், நாடக மேடை, சமுதாயக்கூடம், க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தானிய களம், அங்கன்வாடி கட்டிடம், உயர் கோபுர மின் விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தில்.செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார், டாக்டர்லாவண்யா மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story