முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டம்


முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 3:02 AM IST (Updated: 13 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

முத்தரையர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூரில், தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அம்பலத்தரசு என்கிற ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி வரவேற்றார். வருகிற சட்டமன்ற தேர்தலில் முத்தரையருக்கு 20 தொகுதிகளில் வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக முத்தரையர் சங்கத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். முத்தரையருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் காலியாகும் பதவியிடங்களில் முத்தரையர் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் பொய்யாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story