ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
கரூர் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர்
ஆபத்தான மின்கம்பம்
கரூர் ஜவகர்பஜார் சாலையில் பிரபலமான காமராஜ் மார்க்கெட், மாரியம்மன் கோவில் ஆகியவை உள்ளன. மேலும் நகைக்கடைகள், டீக் கடைகள், மளிகை கடைகள் உள்பட ஏராளமான கடைகளும் உள்ளன. இதனால், இந்த சாலை எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஜவகர் பஜார் சாலையில் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இருந்து கரூர் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஒரு டீக்கடை எதிரில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
மாற்றி அமைக்க வேண்டுகோள்
இதனால், இந்த கம்பத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பயத்துடன் தான் சென்று வருகிறார்கள். ஆகவே, இந்த பழுதடைந்த இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story