பாத்திர தொழிலை பாதுகாக்க தொழிற்பேட்டை


பாத்திர தொழிலை பாதுகாக்க தொழிற்பேட்டை
x
தினத்தந்தி 13 Feb 2021 3:32 AM IST (Updated: 13 Feb 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

பாத்திர தொழிலை பாதுகாக்க தொழிற்பேட்டை கனிமொழி எம்.பி.பேச்சு

அனுப்பர்பாளையம்:
திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நேற்று மாலை பாத்திர தொழில் சங்க நிர்வாகிகளை கனிமொழி எம்.பி. சந்தித்தார். அப்போது அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நெருப்பெரிச்சலில் திருப்பூர் மாவட்ட திருநங்கைகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, அவர்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் பாத்திர தொழிலுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அனுப்பர்பாளையம் பாத்திரத்தொழிலை பாதுகாக்க தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி நெசவாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். திருநங்கைகளுக்கு இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளுக்கான அனைத்து விஷயங்களிலும் தி.மு.க. துணை நிற்கும் என்றார். பின்னர் பெருமாநல்லூர் செல்லும் வழியில் கணக்கம்பாளையம் பிரிவில் ஒரு கடையில் டீக்குடித்த அவர் அங்கு திண்பண்டங்களை வாங்கி பொதுமக்களுக்கு கொடுத்தார். பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Next Story