பண்ணாரி அருகே வாகனத்தில் அடிபட்டு கோதுமை நாகம் சாவு


பண்ணாரி அருகே வாகனத்தில் அடிபட்டு கோதுமை நாகம் சாவு
x

பண்ணாரி அருகே வாகனத்தில் அடிபட்டு கோதுமை நாகம் இறந்தது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி அருகே மலைப்பாதை தொடங்கும் இடத்தில் நேற்று சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு  நாகப்பாம்பு இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று பாம்பின் உடலை எடுத்து சென்றார்கள். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘இறந்தது அரியவகையான கோதுமை நாகப்பாம்பு. கொடிய விஷத்தன்மை கொண்டதாகும். ரோட்டை கடக்கும்போது வாகனத்தில் அடிப்பட்டிருக்கலாம். எனவே திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாம்புகள் பாதையை கடந்தால் காத்திருந்து செல்லவேண்டும்’ என்றார்கள்.

Next Story