சேலம் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி


சேலம் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Feb 2021 4:41 AM IST (Updated: 13 Feb 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்:
சேலத்தில் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்டோ டிரைவர்
சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள ஜலால்புறா பகுதியை சேர்ந்தவர் வெள்ளை என்கிற பைரோஸ் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு திடீரென்று பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். 
இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக அரசு ஆஸ்பத்திரி முன்பு கழுத்தில் ரத்தம் வழிந்தபடி நிருபர்களிடம் பைரோஸ் கூறியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தவறு செய்தேன். அந்த தவறுக்காக சிறைக்கு சென்றேன். தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு திருந்தி தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறேன்.
பரபரப்பு
இந்த நிலையில் டவுன் போலீசார் என்மீது பொய் வழக்கு போட தொடர்ந்து முயற்சி செய்து என்னை அடிக்கடி தொல்லை படுத்துகின்றனர். எனவே போலீசாரின் தொல்லை தாங்க முடியாமல் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் பொய் வழக்கு போட முயற்சி செய்வதாக கூறி ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சேலம் டவுன் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story