புதுவையில் கொரோனா பரிசோதனை 6 லட்சத்தை தாண்டியது


புதுவையில் கொரோனா பரிசோதனை 6 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 Feb 2021 4:47 AM IST (Updated: 13 Feb 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனா பரிசோதனை 6 லட்சத்தை தாண்டியது.

புதுச்சேரி,

புதுவை  மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்  19 பேருக்கு  தொற்று  உறுதி  செய்யப்பட்டுள்ளது.    31 பேர் குணமடைந்துள்ளனர். 

புதுவை மாநிலத்தில் கொரோனா பரிசோதனை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது 6 லட்சத்து 600 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 39 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 476 பேர் குணமடைந்துள்ளனர். 656 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story