சேலம் புதிய பஸ் நிலையத்தில் 42 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 42 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 42 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்புகள்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பழக்கடை, செருப்புக்கடை, பூக்கடை, விளையாட்டு பொருட்கள் கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தன.
இந்த கடைகளினால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனிடையே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) பழனிசாமி தலைமையில் உதவி கமிஷனர்கள் ராம்மோகன், சாந்தி மற்றும் அதிகாரிகள் நேற்று புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
கடைகள் அகற்றம்
இதையடுத்து பஸ் நிலையத்துக்குள் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கடைகளில் இருந்த பொருட்கள் மாநகராட்சி வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. மொத்தம் 42 கடைகள் அகற்றப்பட்டன.
மேலும் கூடுதல் நுழைவு வாயில் ஏற்படுத்திய கடை முன்பு சுவர் வைத்து அடைத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி அங்கு பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story