மாங்காடு அருகே, வேலை செய்த வீட்டிலேயே நகை திருடிய பெண் கைது
மாங்காடு அருகே வேலை செய்த வீட்டிலேயே நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (வயது 58), இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைக்கும் போது ஒரு வைர கம்மல் மற்றும் 4 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
பீரோ கதவு உடைக்கப்படாததால் வீட்டில் இருப்பவர்கள் தான் நகையை திருடியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களது வீட்டில் வீட்டு வேலை செய்யும் அம்பிகா (31) என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரது கைரேகைகளை எடுக்க வேண்டும் என போலீசார் கூறியதால் பயந்து போன அம்பிகா பீரோவில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர் கூறியதாவது:-
பீரோவின் சாவி தொலைந்து இருந்த நிலையில் மாற்று சாவி போடப்பட்டிருந்தது. பீரோ திறந்து நகை அதிக அளவில் இருக்கும் போது எடுத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து நகையை திருடியதாக தெரிவித்தர். மேலும் அவர்களின் மகனின் திருமணத்தின் போது மருமகளுக்கு போடுவதற்காக வைர கம்மல் வைத்திருந்தனர். அதனை திருடிய போது சிக்கி கொண்டடேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவரிடம் இருந்து வைர கம்மல் மற்றும் 4 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வேலை செய்த வீட்டிலேயே நகை திருடிய பெண் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story