செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2021 3:27 AM GMT (Updated: 13 Feb 2021 3:27 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 772 பேர் உயிரிழந்துள்ளனர். 285 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். 89 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story