கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபர் போக்சோவில் கைது


கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 13 Feb 2021 10:39 AM IST (Updated: 13 Feb 2021 10:39 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரம்விளக்கில் கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றியதாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

நான் 17 வயது சிறுமியாக இருக்கும்போது, சூளைமேட்டைச் சேர்ந்த நந்தா என்பவர் என்னை காதலித்தார்.18 வயதை தாண்டியதும் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டினார். என்னை உல்லாசமாக பல இடங்களுக்கு அழைத்து சென்றார்.

18 வயதை தாண்டியதும் என்னை திருமணம் செய்ய வற்புறுத்தினேன். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்தார். தற்போது நான் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவி.என்னை ஏமாற்றிய நந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நந்தாவை கைது செய்தனர்.

Next Story