தூய்மை இந்தியா திட்டம்: இணையதளம் மூலம் உறுதிமொழி எடுத்த 1,500 பேருக்கு சான்றிதழ் - சென்னை மாநகராட்சி வழங்கியது


தூய்மை இந்தியா திட்டம்: இணையதளம் மூலம் உறுதிமொழி எடுத்த 1,500 பேருக்கு சான்றிதழ் - சென்னை மாநகராட்சி வழங்கியது
x
தினத்தந்தி 13 Feb 2021 10:45 AM IST (Updated: 13 Feb 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

இணையதளம் மூலம் தூய்மை இந்தியா திட்டம் உறுதிமொழி எடுத்துக்கொண்ட 1,500 பேருக்கு சென்னை மாநகராட்சி சான்றிதழ் வழங்கியது.

சென்னை, 

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி முதல் நகர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை உருவாக்குதல் உள்ளிட்ட தூய்மை சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் முதலியன இதன் முக்கியமான நோக்கங்களாகும்.

தூய்மையாக இந்தியாவை உருவாக்க பொதுமக்களின் எண்ணத்திலும், செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை வாழ்மக்கள் அனைவரும் முழு தூய்மையான சென்னையை உருவாக்க “தூய்மை இந்தியா உறுதிமொழியை” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சென்னை மாநகராட்சி இணையதளம் மூலமாக ஏற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழியை ஏற்கும் அனைவருக்கும் இணையதளம் மூலமாகவே உறுதிமொழி எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தி, இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story