விபத்தில் மாணவன் பலி
விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்
ராமநாதபுரம்,
பெரியபட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சுஐபு. இவர் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பள்ளியில் படிக்கும் முகுசின் காமில் (16) என்பவருடன் மொபட்டில் ரெகுநாதபுரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே முகமது சுஐபு பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த காமில் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story