பரமக்குடியில் திருவிளக்கு வழிபாடு
பரமக்குடியில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 21-வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கு கோவிலின் பரம்பரை டிரஸ்டி ஜீவானந்தம் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரம் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். ஜெயகாந்தி மணிவண்ணன், ஜோதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். குருவியார் இலக்குமணன் திருவிளக்கு வழிபாட்டை நடத்தினார். அம்பாளுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. நிகழ்ச்சியில் தாமோதரன் ஐயர், பூமிநாதன், நாகசேகரன், கனகா, ராஜேசுவரி, மல்லிகா, வின் சர் முருகேசன், முனியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூசாரி சித்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story