கண்டன பொதுக்கூட்டம்
தொண்டியில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
தொண்டி,
தொண்டியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாடானை வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அபூபக்கர் தலைமை தாங்கினார். அனைத்து சமுதாய தலைவர்கள் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தொண்டி பைத்துல் மால் சொசைட்டி செயலாளர் செய்யதுஅலி வரவேற்றார். அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா, அய்யாவழி பாலமுருகன், சிவகங்கை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் முகம்மது ரிழா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பதுல்லா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story