தேசிய அளவிலான கருத்தரங்கம்


தேசிய அளவிலான கருத்தரங்கம்
x
தினத்தந்தி 13 Feb 2021 7:55 PM IST (Updated: 13 Feb 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல் துறை மற்றும் சென்னை அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் பயன்பாட்டு உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் முன்னேற்றம் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லூரி செயலர் மரியசூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமலதா முன்னிலை வகித்தார். உயிர்வேதியியல் துறைத் தலைவர் பாஸ்கர பூபதி வரவேற்றார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிர்வேதியியல் துறைப் பேராசிரியர் மனோகரன், விலங்கியல் துறைப்பேராசிரியர் வாசுதேவன், சென்னைப் பல்கலைக்கழக தாவரவியல் உயர் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் நாகராஜ், பாரதியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கத் தலைப்பு தொடர்பாக உரையாற்றினர். கருத்தரங்கில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.உயிர்வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் மகேஸ் நன்றி கூறினார்.

Next Story