திருவண்ணாமலை; நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனங்கள் பறிமுதல்


திருவண்ணாமலை; நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Feb 2021 7:58 PM IST (Updated: 13 Feb 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பதிவெண் இல்லாமல் இயங்கிய நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்க பேட்டரி மூலம் இயங்கும் 60 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலைக்கு வந்திருந்த டிராபிக் ராமசாமி திருவண்ணாமலை நகரப்பகுதியில் குப்பைகளை சேகரித்து சென்ற 2 பேட்டரி வாகனங்களை தடுத்து நிறுத்தி பார்வையிட்டார். அப்போது அந்த வாகனங்களில் பதிவு எண்கள் இல்லாதது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது பதிவெண் இல்லாமல் வாகனங்கள் இயக்கக்கூடாது என்றும், இது சட்டப்படி குற்றம் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று டவுன் போலீசாரிடம் டிராபிக் ராமசாமி தெரிவித்தார். 

அப்போது நகராட்சி அலுவலர்கள், இந்த வாகனங்களுக்கு பதிவெண்கள் கிடையாது. இதுபோல தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதுபோன்ற வாகனங்களுக்கு பதிவெண் வாங்க வேண்டும் என்று அரசாணை உள்ளதாக போலீசாரிடம் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

Next Story