தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை


தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2021 8:34 PM IST (Updated: 13 Feb 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமேசுவரம், 
தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகார்

ராமேசுவரம் பகுதியில் தினமும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின் றனர். இவ்வாறு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பதாக மீன் துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் வந்து கொண்டு இருந்தது. 
நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடித்ததாக 16 படகுகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த படகுகளுக்கு திரும்பவும் மீன்பிடிக்க செல்வதற்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் டோக்கன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன்  தற்காலிகமாக  அந்த படகுகளுக்கும் டோக்கன் வழங்க அனுமதித்தார். அதன் பிறகு டோக்கன் வழங்கப்பட்டு அந்த படகுகளிலும் சேர்த்து 439 படகுகள் மீன்பிடிக்க சென்றன.

எச்சரிக்கை

இதுகுறித்து மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:- தடைசெய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி போன்ற வலைகளை வைத்து மீன் பிடிப்பது மிக தவறு. பலமுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தும் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருவதாக தகவல் தெரிகிறது. இனிவரும் காலங்களில் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மீன்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story