ஜெயின் கோவிலில் 24 மணி நேர தியானம்
ஜெயின் கோவிலில் 24 மணி நேர தியானம் நடந்தது
மதுரை,
மதுரை ஜெயின் ஸ்தானகிவாசி சமாஜ் சார்பில் ஜெயின் ஆச்சாரிய குரு அமர்முனி நினைவு நாளையொட்டி மஞ்சனக்கார தெருவிலுள்ள தேராபந்த் பவனில் நேற்று 24 மணி நேர தியானம் நடைபெற்றது. இதில் வடமாநிலத்தில் இருந்து வந்த ஜெயின் துறவிகள் பங்கஜ்முனி. வருண்முனி ஆகியோர் தலைமையில் 24 மணி நேர தியானம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை வாழ் ஜெயின் சமூத்தினர் அனைவரும் பங்கேற்றனர். இதைதொடர்ந்து முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலைகளை வழங்கினர். இந்த நிகழ்சிக்கான ஏற்படுகளை மதுரை ஜெயின் ஸ்தானகிவாசி தலைவர் நேமிசந்த் ஜெயின் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story