குடிமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


குடிமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Feb 2021 10:49 PM IST (Updated: 13 Feb 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

குடிமங்கலம்:
குடிமங்கலத்தில் பயிர் கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர்க்கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும்நகை கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் கடந்த 5-ந்தேதி அன்று சட்டப்பேரவையில் கூட்டுறவு நிர்வாகங்களில் கடந்த மாதம் ஜனவரி 31-ந்தேதி அன்று நிலுவையில் உள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக் குளறுபடி காரணமாக டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021-ல் கொடுக்க வேண்டிய கடன் தொகையை 2 மாதம் தாமதமாக பிப்ரவரியில் வழங்கியும் வழங்காமலும் இருந்ததன் காரணமாக சுமார் 45 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக்குளறுபடி காரணமாக தள்ளுபடி சலுகை இழக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
முற்றுகை
இதனை கண்டித்தும் தமிழ் விவசாய சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் குடிமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-  குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உதவியாக பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் விவசாயிகள் தங்களிடம் உள்ள பயிர் கடன் மற்றும் நகைக் கடன் ரசீது நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்தையும் விவசாய தலைவர்களிடம் வழங்கினர்.

Next Story