கடத்தூர் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கடத்தூர் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
மடத்துக்குளம்:-
மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் கடத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பு கருதி கடத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் வளாகத்திற்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியாகி இருந்தது.
இதனையடுத்து தற்போது கடத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுசுவர் அமைக்கும் பணிக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 10 வருடத்திற்கும் மேலாக கடத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கும் கோரிக்கையை அதிகாரிகள் பார்வைக்கு வெளிப்படுத்தி சுற்றுச்சுவர் அமைய காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கு பள்ளியின் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story