பயிற்சி முடித்த 395 வீரர்கள் சத்திய பிரமாணம்
வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 395 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் உள்ளது. இந்த பழமை வாய்ந்த மையத்தில் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
உடற்பயிற்சி, இந்தி மொழி பயிற்சி, ஆயுத பயிற்சி போன்றவை வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகளை முடித்த வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்த பிறகு எல்லையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதன்படி நேற்று எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 395 இளம் வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்கள் பகவத் கீதை, குரான், பைபிள், தேசிய கொடி வைக்கப்பட்ட தட்டில் கை வைத்து சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து இளம் வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 8 பேருக்கு, கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story