அ.ம.மு.க. பிரமுகர் குழந்தையுடன் பலி
கீரனூரில் சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் கார் மோதியதில் அ.ம.மு.க.பிரமுகர் குழந்தையுடன் பலியானார். கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சென்றபோது, இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
கீரனூர்,பிப்.14-

அ.ம.மு.க.பிரமுகர்
சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 40). இவர் அங்கு பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். மேலும் திருவெற்றியூர் கிழக்கு பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக ராமனின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக ராமனின் மனைவி ஜெயந்தி (24), அவர்களது 2 வயது குழந்தை ரக்சன், ராமனின் தம்பி பாலையா (32) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் கோவர்த்தன் (50), நந்தினி (25) உள்பட 8 பேர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
தந்தை-மகன் பலி
காரை திருவெற்றியூரை சேர்ந்த சிலம்பரசன் (34) என்பவர் ஓட்டி வந்தார். கார் நேற்று அதிகாலையில் கீரனூர் புறவழி சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த கார் சாலையோரத்தில் உள்ள இரும்பு தடுப்பில் மோதியது. இதில் இரும்பு தடுப்பு கம்பி உடைந்து காருக்குள் இருப்பவர்களை குத்தியது. மோதிய வேகத்தில் காரும் நொறுங்கியது.
இந்த விபத்தில் ராமன், அவரது குழந்தை ரக்சன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாற்றுவழித்தடத்தில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
6 ேபர் காயம்
விபத்தில் இறந்த ராமனின் ஒரு கால் காருக்குள்ளே துண்டாகி கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தில் ஜெயந்தி, பாலையா, கோவர்த்தன், நந்தினி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் காரை ஓட்டி வந்த டிரைவர் சிலம்பரசன் கீரனூர் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தை கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்.

Related Tags :
Next Story