கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆலங்குடியில் இலவச வேட்டி-சேலை திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதால் கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடகாடு, பிப்.14-
ஆலங்குடியில் இலவச வேட்டி-சேலை திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதால் கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிராம நிர்வாக உதவியாளர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 38). இவர் மாங்காட்டில் கிராமநிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராமன் ஆலங்குடி தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த சங்க நிர்வாகிகள் ஆலங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு வழக்கில் தொடர்புபடுத்தி...
கடந்த 8-ந்தேதி ஆலங்குடியில் தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை திருட்டு நடைபெற்றது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த திருட்டு வழக்கில் ராமனை தொடர்புபடுத்தி ேபசப்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில் ராமனின் உறவினர்கள் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜாவிடம், ராமனின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆலங்குடியில் கிராம நிர்வாக உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story