காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்
x
காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்
தினத்தந்தி 14 Feb 2021 12:51 AM IST (Updated: 14 Feb 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

அன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

 இந்தநிலையில் 8-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20 நாட்கள் ஆகியும் குடிநீர் கிடைக்கவில்லை.  எனவே இதை கண்டித்து அப்பகுதி பெண்கள் அன்னூர்- சத்தி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை என்பதால் அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரித்தனர்.

முடிவில் விரைவில் குடிநீர் வினியோகத்திற்கு தீர்வு காணப்படும் என்று அவர் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சத்தி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story