வழிப்பறி செய்ய திட்டம்:ஒருவர் கைது


வழிப்பறி செய்ய திட்டம்:ஒருவர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2021 12:53 AM IST (Updated: 14 Feb 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஒருவர் கைது

விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று கருப்பசாமி நகர் செல்லும் வழியில் பாலன் நகரை சேர்ந்த பாண்டியராஜன், கார்த்திகை செல்வன், முத்தால்நகரை சேர்ந்த பாண்டி, பாலமுருகன் ஆகியோருடன் நின்று கொண்டு வாரச்சம்பளம் வாங்கி வரும் தொழிலாளர்களை வழிமறித்து பணம் பறிக்க திட்டமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற பாண்டியன்நகர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். மணிகண்டன் அங்கு நிறுத்தியிருந்த காரில் ஏற முயன்றபோது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரது காரையும் காரில்இருந்த அரிவாளையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டன், பாண்டியராஜன், பாண்டி, பாலமுருகன், கார்த்திகை செல்வன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story