திருச்சுழியில் புதிய நீதிமன்றம் திறப்பு


திருச்சுழியில் புதிய நீதிமன்றம் திறப்பு
x
தினத்தந்தி 14 Feb 2021 12:56 AM IST (Updated: 14 Feb 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி  அ.முத்து சாரதா வரவேற்றார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பேசினார்.  மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் விருதுநகர் மாவட்ட (பொறுப்பு) நீதிபதி சுப்பிரமணியன் மற்றும் ஆனந்த வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விருதுநகர் மாவட்ட அனைத்து நீதிபதிகள், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம்,  விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக  அபர்ணா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். முடிவில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) கதிரவன் நன்றி கூறினார்.

Next Story