களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா


களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா
x
தினத்தந்தி 14 Feb 2021 1:02 AM IST (Updated: 14 Feb 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வந்து காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவினர் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். இதேபோல் நேற்று இரவில் களக்காடு வரதராஜபெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story