நெல்லையில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி


நெல்லையில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி
x
தினத்தந்தி 14 Feb 2021 1:06 AM IST (Updated: 14 Feb 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

நெல்லை:

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்திலும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிசிகள் போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு போடப்பட்டது. இந்த தடுப்பூசி முதல் கட்டமாக முதல் நாளில் போட்டவர்களுக்கு 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டும். இதயொட்டி 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

நெல்லையில் ஐகிரவுண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அப்போது டீன் ரவிச்சந்திரன் உள்ளிட்ட டாக்டர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதே போல் அடுத்தடுத்த நாட்களில் 28 நாட்கள் முடிந்தவர்களுக்கு 2-வது கட்ட தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story