வாகனங்கள் செல்ல முடியாத படி இரும்பு தடுப்பு
வனப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத படி இரும்பு தடுப்பினை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வனப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத படி இரும்பு தடுப்பினை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.
விலங்குகளுக்கு இடையூறு
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் பல்வேறு வாகனங்கள் செல்வதாகவும், இதனால் வன விலங்குகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தும் வகையில் செல்லும் அனைத்து வகையான வாகனங்களையும் தடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
15 இடங்களில் தடுப்பு
இதையடுத்து மலை அடிவாரப்பகுதிகளில் அதிக அளவு வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் வாகனங்கள் செல்லும் வழிகளை கண்டறிந்து நிரந்தரமாக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கான்சாபுரம், பிளவக்கல் அணை என 15 இடங்களில் இந்த இரும்பு தடுப்பினை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.
Related Tags :
Next Story