நெல்லை, தென்காசியில் 13 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லையில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 663 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 61 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,486 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 46 பேர் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story