மேட்டூர் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்


மேட்டூர் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Feb 2021 8:11 AM IST (Updated: 18 Feb 2021 8:14 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்.

கொளத்தூர்,

மேட்டூர் ஆஸ்பத்திரி காலனியை சேர்ந்தவர் பிரதீப். தொழில் அதிபர். இவருக்கும் கொளத்தூரை சேர்ந்த குமார் என்பவருக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குமார் பிரபல ரவுடிகளுடன் சேர்ந்து பிரதீப்பை சொகுசு கார் ஒன்றில் கொளத்தூருக்கு கடத்தி வந்து அவரிடமிருந்த சொத்தை எழுதி அபகரிக்க முயற்சித்துள்ளார். 
இந்த சம்பவம் குறித்து பிரதீப் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ஓமலூர் பச்சனம் பட்டியைச் சேர்ந்த சந்திரன் (27) என்பவரை நேற்று கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் கைது செய்து மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story