சேவூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர்,
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர்
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி 5-வது வார்டு குமாரபாளையம், தண்டுக்காரன்பாளையம் ஆதிதிராவிடர் காலனிகளில், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆற்றுக்குடிநீர், ஆழ்துழாய் குடிநீர் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்று நீர் திடீரென வற்றிவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாளைக்கு ஒரு முறை வழங்கிவந்த ஆற்று குடிநீரும், குழாய் உடைப்பின் காரணமாக கடந்த10 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் குடிநீர் வரவில்லை.இதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதையடுத்து நேற்று 5-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்ததில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அவினாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன், சேவூர் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தையில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் ஆற்றுக்குடிநீர் குழாய் உடைப்பாலும், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததாலும சீரான குடிநீர் விநியோகிக்க முடியவில்லை.அதனால் தங்களுக்கு அருகில் உள்ள 6-வது வார்டு பகுதியிலிருந்து முறையான குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என கூறினர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story