வால்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் ஜகரண்டா மலர்கள்
வால்பாறை பகுதியில் ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.
வால்பாறை,
வெயில் காலத்தில் சித்திரை கொன்னை மலர்களும், குளிர் மற்றும் பனிக்காலத்தில் பனிமலர்கள் என்று அழைக்கப்படும் சூரியகாந்தி பூவைப்போல காட்சி தரும் மஞ்சள் நிற கார்த்திகை பூக்களும், வெள்ளை நிறத்தில் பூக்கும் டிசம்பர் பூக்களும் பூத்து குலுங்கும்.
தென்மேற்கு பருவமழை காலங்களில் ஸ்பெத்தோடியம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறத்தில் காணப்படும் தண்ணீர்க்காய் பூக்கள் பூத்து குலுங்கும். இந்த நிலையில் தற்போது வால்பாறையில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நீலநிற ஜகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வால்பாறை பொள்ளாச்சி சாலை ஒரங்களிலும், பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் பூத்து குலுங்குகிறது. இதனை வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
Related Tags :
Next Story