காரில் வந்து ஆடுகள் திருட முயன்ற 3 பேர் கைது
காரில் வந்து ஆடுகள் திருட முயன்ற 3 பேர் கைது
சாயல்குடி
சாயல்குடி அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிக்கோடி(வயது 55). இவர் கீழமுந்தல் கிராமத்தில் தங்கி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று ஆடுகளை கீழமுந்தல் பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த உச்சிப்புளி பகுதியை சேர்ந்த சிவக்குமார்(21), ரெகுநாதபுரம் கொல்லந்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக்(21), ஏர்வாடி முத்தரையர் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(21), ஆதஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சூர்யா(21) உள்பட 7 பேர் தனிக்கோடியை அரிவாளால் தாக்கினர். பின்னர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருட முயன்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவக்குமார், கார்த்திக், சதீஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்ததுடன் தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார ்தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story