துறவிகளுக்கு பாதபூஜை
துறவிகளுக்கு பாத பூஜை நடைபெற்றது.
புதுக்கடை:
கிள்ளியூர், முன்சிறை ஒன்றிய இந்து கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் தாய்- தந்தையர் மற்றும் துறவிகளுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி கூட்டாலுமூட்டில் நடந்தது. இந்து கோவில்களின் கூட்டமைப்பு தலைவர் அம்சி மது தலைமை தாங்கினார் ஒன்றிய தலைவர் ரத்தின மணி கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்சிறை யூனியன் தலைவி ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்துக் கோவில் கூட்டமைப்புகளின் குமரி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்த மகராஜ் கலந்து கொண்டு உறவுகள் மேம்பட என்ற தலைப்பில் பேசினார். பின்னர் 101 பேர் தங்கள் பெற்றோர்களுக்கும், இந்து துறவிகளுக்கும் பாத பூஜைகள் செய்து ஆசி பெற்றனர்.
Related Tags :
Next Story