ராமேசுவரத்திற்கு காஞ்சி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமி வருகை


ராமேசுவரத்திற்கு காஞ்சி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமி வருகை
x
தினத்தந்தி 19 Feb 2021 1:13 AM IST (Updated: 19 Feb 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்திற்கு காஞ்சி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமி வருகை

ராமேசுவரம்
ராமேசுவரத்திற்கு நேற்று இரவு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு பஸ் நிலையம் அருகே உள்ள காட்டுப்பிள்ளையார் கோவில் முன்பு ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, பேஸ்கார்கள்அண்ணாதுரை, செல்லம், கமலநாதன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் இருந்தனர். இதைதொடர்ந்து விநாயகர் கோவிலுக்கு சென்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமி தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து சிவ வாத்தியங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள சங்கரமடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் 25-ந்தேதி வரை சங்கர மடத்தில் தங்கியிருந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றார். 22-ந் தேதி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமநாதபுரம் சென்று இருந்தார். அவருக்கு ராமலிங்க விலாசம் அரண்மனையில் ராமேசுவரம் கோவில் தக்கார் குமரன் சேதுபதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கோவில்களின் நிர்வாகிகள், கிராம கோவில் பூசாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதில் ராணி லட்சுமி நாச்சியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story