15 பவுன் நகை திருட்டு


15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 Feb 2021 1:31 AM IST (Updated: 19 Feb 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

15 பவுன் நகை திருட்டு

பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கோவிந்தராஜ் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கோவிந்தராஜ் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அதை தமிழ்ச்செல்வி கண்டித்து தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு முற்றியது. இதனால் கோபம் அடைந்த தமிழ்ச்செல்வி அருகில் உள்ள அவரது பாட்டியின் வீட்டிற்கு சென்று இரவு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து வந்து வீட்டில் இருந்த பீரோவை பார்த்துள்ளார். அதில் இருந்த 15 பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தமிழ்ச்செல்வி பார்த்திபனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story