ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குரும்பலூரில் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர்:
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் காமராஜ் தலைமை தாங்கி பேசினார். திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கத்தை குறித்து பேசினார். குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் வாழ்த்தி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் சூர்யகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, மகிளா கேந்திர திட்ட மகளிர் நல அலுவலர் ஜெயந்தி, போஷன் அபியான் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தரவள்ளி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேமஜெயம் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இயக்கம், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், மண் வள அட்டை திட்டம், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், வாக்காளர் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மாதம், மக்கள் மருந்தகங்கள், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ஆகிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story