கார் மோதி பெண் பலி


web photo
x
web photo
தினத்தந்தி 19 Feb 2021 1:41 AM IST (Updated: 19 Feb 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே கார் மோதியதில் பெண் பலியானார்.

விராலிமலை
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட மலம்பட்டியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி தைலம்மை(வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை பாத்திமா நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மொபட்டில் சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.  திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தைலம்மை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Next Story