திருப்பூரில் மேம்பாலம் அமைக்க மண் மாதிரி சேகரிப்பு
திருப்பூரில் மேம்பாலம் அமைக்க மண் மாதிரி சேகரிப்பு
திருப்பூர்:-
திருப்பூர் தொழில்நகரம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மாநகர் பகுதிகளில் எப்போது வாகனங்களில் அதிகளவில் சென்று வருவதால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலில் மாநகரம் திணறும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பழைய பஸ் நிலையம் முதல் சின்னக்கரை வரையில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதிகளில் மண்மாதிரி எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளும் தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story