மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 1:59 AM IST (Updated: 19 Feb 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியாக டவுன் காஜி நியமனம் செய்யாத மாவட்ட நிர்வாகம், தமிழக அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மீரா மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முகம்மது ஆகியோர் பேசினர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ் அலி கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உடனடியாக டவுன் காஜியை நியமனம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Next Story