தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2021 2:03 AM IST (Updated: 19 Feb 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

மேலூர்,பிப்.
மேலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
தொடர் திருட்டு
மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதும், சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுர்ஜித்குமார் ஆலோசனையின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இ்ந்த தனிப்படையினர் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
7 பேர் கைது
இது தொடர்பாக மதுரை காமராஜபுரம் சதீஸ்பாண்டி (வயது 23), சிவகங்கை மாவட்டம் பில்லூரை சேர்ந்த அசோக் என்ற முத்துப்பாண்டி (24), சாருக்கான் (21), சம்சுதீன் (20), நிலக்கோட்டை அருகில் உள்ள மட்டப்பாறையை சேர்ந்த சோனைமுத்து (25) உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 
இவர்கள் மேலூர், கீழவளவு, அப்பன்திருப்பதி, சத்திரப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்கள், 12 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Next Story