வெங்காயம் விலை உயர்வு
தளவாய்புரம் அருகே காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
விலை உயர்வு
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு தற்போது மற்ற காய்கறிகளின் விலையை விட வெங்காயத்தின் விலை அதிகமாக இருக்கிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து செட்டியார்பட்டி காய்கறி வியாபாரி சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது:-
இங்குள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் மைசூர், ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் வெங்காயம் வருகிறது. இங்கு தற்போது மற்ற காய்கறிகளின் விலை குறைவாக உள்ளது. ஆனால் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110 முதல் ரூ. 140 வரை ரகத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு
இதேபோல் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் இங்கு சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 ஆகவும், பல்லாரி ரூ.35 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது அண்மையில் பெய்த மழையினால் வெங்காயம் வரத்து குறைவாக இருக்கிறது. மேலும் இங்கு அருகிலுள்ள பகுதிகளில் பெரும்பாலானோர் நெல் பயிரிட்டு வருகின்றனர்.
அறுவடை
தற்போது அதனை அவர்கள் அறுவடை செய்து வெங்காயம் பயிரிட்டு உள்ளனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்தாலும் மக்கள் எப்போதும் போல் வெங்காயத்தை கிலோ கணக்கில் தான் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story